இளம் பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த நாகர் கோவிலைச் சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி (வயது 26). பெண் மருத்துவர் உள்பட பல பெண்களுடன் முகநூல் மூலம் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் காதல் அம்பை எய்துள்ளார். இதில் சிக்கும் பெண்களை தனியாக வரசொல்லி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருந்தார். இதையடுத்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக காசி மிரட்டியுள்ளார்.
இவ்வாறு மிரட்டி மிரட்டியே அந்த பெண்களை மீண்டும் மீண்டும் தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். ஒரு வேளை மீண்டும் பாலியல் இச்சைக்குள்ளாகாத பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலையும் காசி செய்ததாக பெண் ஒருவர் புகார் செய்திருந்தார். அந்த புகாரின் பேரில் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது.
undefined
'இந்த அடக்குமுறையில் இருந்து இன்னும் வலிமையாக திமுக வெளியே வரும்’ - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 முறை ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.மூன்றாவது முறையும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் காசியின் தந்தை என்பதை தவிர அந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 395 நாட்களாக சிறையிலிருந்ததால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இன்று பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு வழங்கினார்.
செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - நாராயணன் திருப்பதி கருத்து