விஜயதாரணியிடம் ரூ.20 கோடி வாங்குங்க: சீமான் காட்டம்!

Published : Mar 29, 2024, 09:53 PM IST
விஜயதாரணியிடம் ரூ.20 கோடி வாங்குங்க: சீமான் காட்டம்!

சுருக்கம்

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை விஜயதாரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம் தெரிவித்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்ட சீமான், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ அதை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். இடைத்தேர்தலுக்கு ரூ.20 கோடி செலவாகும் என்றால் அதை தேர்தல் ஆணையம் விஜயதாரணியிடம் வாங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்கள் பணத்தை விரயம் செய்யக்கூடாது எனவும் அவர் கூறினார். மேலும், சொந்த பதவி ஆசைக்காக கட்சி மாறிச் சென்றவருக்காக மக்கள் பணத்தை ஏன் தேர்தல் ஆணையம் செலவிட வேண்டும் என சீமான் கேள்வி எழுப்பி இருந்தார்.

நிர்மலா சீதாராமன், ராமதாஸை வறுத்தெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடக்கவுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?