40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும் - பாஜக பொதுக்கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேச்சு..

By Ramya s  |  First Published Mar 15, 2024, 3:41 PM IST

வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும் என்றும் 2026 தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுக காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்துடன், தமிழகத்தில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார். 

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா சரத்குமார் “ என் கணவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பாஜக உடன் இணைந்த பிறகு முதன்முறையாக இந்த மேடையில் நாட்டின் நாயகன் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். எங்கு சென்றாலும் திருக்குறளை சொல்லி, தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் பிரதமர் மோடி பெருமை சேர்த்து வருகிறார். 
நான் நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகள்..400 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.

Tap to resize

Latest Videos

undefined

இனி பிரதமர் மோடி பேசுவதை தமிழிலேயே கேட்கலாம்.. AI உதவியுடன் புதிய வசதியை அறிமுகம் செய்த பாஜக..

இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து உழைத்து கொண்டிருக்கிறேன். இன்று ஒரு தேசிய கட்சியுடன் இணைந்து மேடையில் பேசும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை, பெருமை இருக்கிறது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் தலைவன் நன்றாக இருக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும். இதோடு நின்று விடாமல் 2026 தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். 

கோவையில் மோடியின் ROAD SHOW அனுமதி மறுத்த காவல்துறை..! சீறும் பாஜக

அன்னப்பறவை போல் பால் எது, தண்ணீர் எது என தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலையிடம் எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லை. இப்போது தான் பழகிக்கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு அண்ணாமலையுடன் நல்ல பழக்கம் உண்டு.பாஜக கண்டெடுத்த சிப்பிக்குள் முத்து தான் அண்ணாமலை. மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். பாஜக வெற்றி தமிழகம் வரை தொடர வேண்டும்”என்று தெரிவித்தார்.

click me!