நாடாளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19-ம் தேதி குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்தவர் விஜயதரணி.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி என்பவர் போட்டிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19-ம் தேதி குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்தவர் விஜயதரணி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: AIADMK Candidates : அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார். யார்.? எந்த தொகுதியில் போட்டி.?
இதனையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்பட உள்ளது. இந்நிலையில், விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக மகளிர் அணி துணை செயலாளராக உள்ளார்.
இதையும் படிங்க: கேட்டதை கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் டிடிவி.தினகரன்.. இந்த முறையாவது விசிலடிக்குமா குக்கர்?