அமைச்சர் தங்கராஜ் மத பிரச்சினைக்கு வழி வகுக்கிறார் - பாஜக பகிரங்க குற்றச்சாட்டு

By Velmurugan s  |  First Published Feb 17, 2023, 6:37 PM IST

அமைச்சர் மனோ தங்கராஜ் அரசியல் சாசன உறுதி மொழிகளை மீறி மத ரீதிளிலான பிரச்சனைகளுக்கு வழி வகுப்பதாக பாஜக சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஹைந்தவ சேவா சங்கத்தினர் சமய மாநாடு நடத்துவதற்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்து துறை சார்பில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைந்தவ சேவா சங்கத்திற்கு ஆதரவாக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் களத்தில் இறங்கி உள்ளன. 

ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று பாஜக நிர்வாகிகள் நாகர்கோவில் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். 

Latest Videos

அந்த புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது அரசியல் சாசன உறுதிமொழிகளை மீறி மத பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறார். 

தங்கம், வெள்ளி தருவதாக கூறி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் சுருட்டிய பெண்ணுக்கு வலை

இந்து மதத்தை விமர்சிக்கும் நபர்களை இந்து கோயில்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி  செய்தியாளர்களிடம் கூறுகையில், நீண்ட காலமாக மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு நடைபெற்று வரும் நிலையில், அதை அறநிலையத்துறை தடுத்திருப்பது ஏற்க முடியாது. இந்த ஆண்டும் இந்த சங்கத்தின் சார்பில் சமய மாநாடு நடத்த அனுமதி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அடுக்கடுக்காக துப்பாக்கிகள், கொத்து கொத்தாக தோட்டாக்கள்; காவலர்களை மிரலவிட்ட மர்ம நபர்கள்

click me!