கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மறுக்கால்தலை விளை பகுதியில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் ஊரில் வேற்று பகுதியை சேர்ந்த நபர்கள் ஜெபக்கூடம் கட்டிவருவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மத கலவரத்திற்கு பிறகு வேணுகோபால் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஏற்கனவே இருக்கின்ற வழிபாட்டுத் தலங்களின் அருகாமையில் மாற்று மதத்தினர் ஆலயங்கள் கட்டவோ, வேறு மத, தெய்வ வழிபாடு நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அது தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மறுக்கால் தலைவிளை பகுதியின் சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர், அப்பகுதியில் சுடலைமாடசாமி கோவில், அம்மன் கோவில் போன்ற எட்டுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன.
undefined
இதன் அருகாமையில் விவசாய நிலத்தை வாங்கிய தனிநபர் தற்போது கிறிஸ்தவ மத வழிபாடு ஜெபக்கூடம் கட்டி வருவதாக எழுந்த புகாரின் பேரில் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வேறு வித பிரச்சினைகள், கலவரங்கள் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் தற்போது இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
புறாவை பறக்கவிட்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியர்
ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இன்று கிராம நிர்வாக அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வசித்துவரும் பகுதியில் தேவாலயம் கட்ட முயற்சிப்பதை கைவிட வலியுறுத்தியும், இதற்கு அனுமதி மறுக்க வேண்டும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். மேலும் தேவாலயம் கட்ட அனுமதி அளித்தாலோ, முயற்சித்தாலோ பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்