இந்து சமய அறநிலையத்துறை இந்து சமயத்துக்கு எதிராக செயல்படுவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிக் கொடை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது போல மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு மாசிக் கொடையின் போது பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது.
மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் ஹைந்தவ சேவா சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் ஹைந்தவ சேவா சங்கம் அரங்கம் அமைத்து 1936 ஆம் ஆண்டு முதல் மாசிக் கொடை விழாவின் போது இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது இந்த மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கம் தலைமையேற்று நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் வண்ணம் வீரம் பக்தி மற்றும் வரலாறு தொடர்பான சமய வகுப்புகள் கலைகள் மற்றும் நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க..Erode East Election : பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !
மேலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி சமய புலவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான உதவிகளும் இந்த மாநாட்டில் ஆண்டுதோறும் வழங்கப்பெற்று வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான 86வது வருட மண்டைக்காடு இந்து சமய மாநாடு மார்ச் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது இந்த நிலையில் இந்து சமய அற நிலையத் துறை ஹைந்தவ சேவா சங்கம் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
85 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வரும் சமய மாநாட்டை எந்தக் காரணமும் இல்லாமல் தடுக்க முயல்வது திமுக அரசின் இந்து மத விரோதப் போக்கையே காட்டுகிறது. திமுக அரசு மதச் சார்பின்மையையும் தங்கள் கட்சிக் கொள்கைகளில் ஒன்றான போலி நாத்திகத்தையும் குழப்பிக் கொண்டு தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது அதன் அடுத்த கட்டமாக தற்போது காரணமேயின்றி அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையையும் தடுத்து நிறுத்த முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க..25 மாத திமுக ஆட்சி.? எடப்பாடி அலை வீசுது.! துணிவுடன் தேர்தலை சந்திக்கும் அதிமுக - ‘கலகல’ செல்லூர் ராஜு
ஹைந்தவ சேவா சங்கம் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த இந்து சமய மக்களையும் ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல் இந்து தர்மத்தின் ஞானத்தை அனைவருக்கும் பரப்புவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வரும் அமைப்பு இந்த அமைப்பின் ஆன்மீகப் பணிகளைத் தடுப்பதன் மூலம் யாரையோ மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் எண்ணம் தவறானதுமத வேற்றுமை இன்றி அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் பொது மக்களிடையே இது போன்ற கசப்புணர்வைத் தூண்டி விடும் செயல்களில் அறிவார்ந்த எந்த அரசும் ஈடுபடாது.
மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கற்ற திமுக இது போன்ற மக்களைப் பிளவுபடுத்தும் தீய எண்ணத்தில் செயல்படுவதையும் பொது மக்களின் அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்இந்து சமய நிலையத் துறை என்பது ஆலய அற நிலையத் மேம்பாட்டிற்கே தவிர ஆளுங்கட்சியின் கொள்கைகளைப் புகுத்துவதற்கல்ல என்பதை திறனற்ற திமுக அரசு உணர வேண்டும் என்பதை தெரிவிப்பதோடு உடனடியாக மண்டைக்காடு கோவிலில் நடக்கும் 86 ஆம் ஆண்டு சமய வகுப்பு மாநாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..Karnataka : யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?