விலை உயர்ந்தாலும் தனியாரை விட கம்மி தான்; ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

By Velmurugan s  |  First Published Sep 15, 2023, 1:20 PM IST

தனியார் நெய் 960 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அதிகபட்சமாக விலை உயர்த்திய பிறகு தான் 700 ரூபாய்க்கு ஆவின் நெய் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் இன்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் உட்பட ஏராளமான திமுகவினர்  கலந்து கொண்டனர். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை  சந்தித்த பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ், தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக  விற்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சீல்; இந்து அமைப்பினர் வாக்குவாதம்

தனியார் நெய் 960 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதிகபட்சமாக விலை உயர்த்திய பிறகு தான் 700 ரூபாய்க்கு ஆவின் நெய்  விற்பனை செய்கிறோம். மேலும் அண்ணாமலை தன்னை விவசாயி மகன் என்று கூறுகிறார். அப்படியானால் விவசாய பெருங்குடி மக்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டாமா? தனியார் நெய் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அண்ணாமலைக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பியவர் ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அண்ணாமலை பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது.என கூறினார்.

click me!