நீங்க இல்லாத உலகத்துல நான் மட்டும் எப்படிப்பா.... தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Sep 7, 2023, 12:20 PM IST

நாகர்கோவிலில் தந்தை உயிரிழந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 76). வயது மூப்பு காரணமாக ஒருசில நோய்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இவரது மகன் பரமசிவம் (48). நாகர்கோவில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் சுப்பிரமணியன் இன்று காலை வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது இறுதிச் சடங்குகள் முடிந்த பின் மாலை வீட்டில் வைக்கப்பட்ட போட்டோவின் முன்பு தந்தையை நினைத்து மகன் பரமசிவம் துயரத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

Latest Videos

பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பிய மாணவி விபத்தில் பலி

இதனால் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு நெஞ்சு வலி வந்துள்ளது. நெஞ்சு வலியால் துடித்த அவரை மீட்டு குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை இறந்த அன்றே மகனும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இளநீர் வெட்டும்போது துண்டான கட்டை விரல்; அற்புதத்தை நிகழ்த்திக்காட்டிய மருத்துவர்கள்

click me!