கன்னியாகுமரி மாவட்டத்தில் இளநீர் வெட்டும் போது தவறுதலாக துண்டான கட்டை விரலை மருத்துவர்கள் மீண்டும் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா (வயது 48). இவர் அதே பகுதியில் இளநீர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வாடிக்கையாளர்களுக்கு இளநீர் வெட்டும் போது தவறுதலாக இவரது இடது கையின் கட்டை விரல் மீது அரிவாள் வெட்டு பட்டு விரல் துண்டானது.
undefined
தொடர்ந்து துண்டான கட்டை விரலுடன் மார்த்தாண்டத்தில் செயல்படும் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பொதுவாக கை விரல் துண்டானால் அறுவை சிகிச்சை செய்து இணைப்பது முழு வெற்றியை தருகிறது. அதே நேரத்தில் கட்டை விரல் துன்டானால் அதை இணைத்து முழு வெற்றி என்பது அபூர்வம்.
கிருஷ்ணஜெயந்தியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவனை பிணமாக மீட்ட அதிகாரிகள்; சோகத்தில் உறவினர்கள்
கட்டை விரலில் ரத்த நாளங்கள் மிக மெலிதாக இருப்பதால் அதை இணைப்பதில் சிக்கல்கள் உண்டு. இந்த சிரமமான சிகிச்சையை மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் இணைத்தனர். தற்போது ஜெயாவின் கட்டை விரல் நாளங்கள் இணைத்து இந்த அறுவை சிகிச்சை முழு வெற்றியை அடைந்துள்ளது.