கிறிஸ்தவ கல்லூரிக்குள் சென்று விநாயகர் சதுர்த்திக்கு டொனேசன் கேட்டு வாக்குவாதம்

By Velmurugan s  |  First Published Aug 31, 2023, 5:06 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே விநாயகர் சதுர்த்திக்கு கிறிஸ்தவ கல்லூரி நிர்வாகிகளிடம் நிதி கேட்டு தகராறு செய்த நபர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ பேராயத்தால்  நிர்வகிக்கப்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு நேற்று  மாருதி 800 காரில்  மூன்று பேர் வந்த நிலையில், கல்லூரி அலுவலகத்தில் சென்று எங்களுக்கு டொனேசனாக பணம்  தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது நீங்கள் யார் எதற்காக உங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்ட போது, வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

வீடியோ பதிவில், நாங்க விநாயகர் சதுர்த்திக்கு, அன்னதானத்துக்கு பைசா வாங்குவோம்  இதெல்லாம் தப்பா சார் என்றும்,  நீங்க யார் என்று கேட்ட நபரிடம் நாங்க இந்து சேனா, நரேந்திரமோடி என்றும் அழுத்தமாக கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதே போன்று கல்லூரிக்குள்  அலுவலக அறைக்குள்ளும் வாக்குவாதம்  நடந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 

34வது இடத்தில் இருந்த பல்கலை. 200வது இடத்திற்கு வந்துவிட்டது; பதிவாளருக்கு எதிராக வீதியில் இறங்கிய பேராசிரியர்கள்

இதில் மூன்று பேர் பணம் கேட்டு வந்த நிலையில், தகராறு ஏற்பட்டு வாக்குவாதம்  நடந்த போதும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அதில் ஒருவர் சிரித்தப்படியே நின்று கொண்டிருந்த காட்சிகளும்,  நாங்க காசு கேட்க கூடாதா  என்று ஒரு கட்சி பெயரை கூறி வெகுளித்தனமாக சண்டையிட்ட காட்சிகளும்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!