கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்றோர் அச்சுறுத்துவதால் பாதுகாப்புக்கோரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு திருமண வயது பூர்த்தி அடையவில்லை என காவலர்கள் சொன்னதைத் தொடர்ந்து காதலர்கள் காவல் நிலையத்தில் இருந்து மாயமாகினர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியைச் சேர்ந்தவர் பிறைட். இவரது மகள் ரிஷா மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்பிளமோ ஏரோநாட்டிக்கல் இஞ்னியரிங் படித்து வருகிறார். தற்போது ரிஷாவிற்கு 18-வயது நிரம்பி ஒரு மாதமே ஆன நிலையில் புதன் அன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பாமல் மாயமானார். இது குறித்து பிறைட் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று குளச்சல் காவல் நிலையத்திற்கு தனது இன்ஸ்டா காதலன் வினு மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்த ரிஷா தான் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கொத்தனார் வேலை பார்க்கும் வினுவை கடந்த 3-வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சென்றதாகவும் அதற்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என பெற்றோர் மீது குற்றம் சாட்டி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
பாஜக முழு பைத்தியம் என்றால், திமுக அரை பைத்தியம் - சீமான் விமர்சனம்
காவல் துறையினர் மாணவியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியதோடு இருவரும் மேஜர் என்பதால் அவர்களது விருப்பபடியே அனுப்ப முடியும் என மாணவியின் பெற்றோரிடம் அறிவுறுத்தி சமரசம் பேசி வந்தனர். ஆனால் மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில் காவல் துறையினர் இருவரின் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை வாங்கி ஆய்வு செய்து விசாரித்தனர்.
அப்போது திடீர் திருப்பமாக காதலன் வினுவுக்கு 20 வயதே ஆன நிலையில் அவர் திருமண வயதை எட்டாததால் சட்டப்படி காதலனுடன் அனுப்ப முடியாது. பெற்றோருடன் தான் அனுப்ப முடியும் என கல்லூரி மாணவியிடம் போலீசார் தெரிவித்ததோடு பெற்றோருடன் செல்வதாக எழுதி கொடுத்து விட்டு செல்லுமாறும் காதலனுக்கு திருமண வயது ஆன பின் இருதரப்பும் பேசி முடிவெடுத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி ரிஷா மற்றும் காதலன் வினு போலீசாரிடம் எழுதி கொடுத்த நிலையில் ரிஷா வின் பெற்றோர் தனது மகளை அழைத்து செல்வதற்காக காவல் நிலைய வளாகத்தில் காருடன் காத்திருந்தனர்.
ஆனால் ரிஷா தனது பெற்றோரின் கவனத்தை திசை திருப்பி விட்டு தனது காதலன் வினுவுடன் காவல் நிலையத்தில் இருந்தே தப்பி சென்றுள்ளார் காத்திருந்த பெற்றோர் மகளை காணாமல் தேடிய நிலையில் அவர் காதலனுடன் தப்பி சென்றது தெரியவந்ததால் அதிர்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து திரும்பி சென்றனர்
இந்த சம்பவத்தால் காவல் நிலைய வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.