தமிழ் திரையுலகின் கலைவானர் என அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்ந்த வீட்டை ஆய்வு செய்த மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் கலைவானரின் வீட்டை சீரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழ் திரைப்படத் துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - ஒழுகினசேரியில் பிறந்தவர். அவர் தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் மற்றும் பாடகராகவும் இருந்தார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர்.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் திறம் படைத்தவர். இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.
undefined
என்.சி.சி. மாணவர்களை கொடூரமாக தாக்கும் சீனியர்; வீடியோ வெளியாகி பரபரப்பு
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியாவர். இவரது வீடு நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டுக்கு உட்பட்ட ஒழுகினசேரியில் உள்ளது.
இந்த பகுதியில் பகுதியில் மேயரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். ஆராட்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்த மேயர், கலைவாணர் வீட்டை ஆய்வு செய்ததோடு, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். கலைவாணர் வீடு மற்றும் அவர்களின் குடும்பத்தின் தற்போதைய நிலைமையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம்; ஆய்வுக்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மேலும் கலைவாணர் வாழ்ந்த வீட்டை, சொந்த செலவில் சீரமைத்து, அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவியை செய்வதாக தெரிவித்துள்ளார்.