கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூர் அருகே உள்ள கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
நாகர்கோவில் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூர் அருகே உள்ள கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை வெள்ளமடம் பகுதியில் வந்துக்கொண்டிருந்த வளைவில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai:அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பயணம் செய்த ஓட்டுநர் உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு ததகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயங்கமடைந்தவர்களை மீட்டு ஆச்சாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அங்சப்படுகிறது.
இதையும் படிங்க;- சென்னையில் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. செல்போன் பேசியபடி சென்ற கல்லூரி மாணவி மீது விரைவு ரயில் மோதி பலி
இந்த விபத்து காரணமாக அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.