குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு நடக்கும் கனிமவள கடத்தலுக்கு, திமுகவின் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகர் குற்றசாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி தேமுதிக பிரமுகர் விஜயகுமார் இல்ல திருமண நிகழ்வில் தேமுதிக தலைவர் விஜயகாந் மகன் விஜய் பிரபாகர் கலந்துகொண்டார்.
வரும் வழியில் விஜய் பிரபாகருக்கு மார்த்தாண்டம், தக்கலை, ஞாறாம்விளை, திக்குறிச்சி உட்பட பல பகுதிகளில் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி, ஆர்த்தி எடுத்து வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த விஜய் பிரபாகர், திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது என்றார். அது செயல்பாட்டில் வந்தால் வரவேற்கலாம் என்றும் கூறினார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் ரெயிடு, உட்பட விவகாரங்கள் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்றும், குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கூறினார். குமரி மாவட்டம் உட்பட அண்டை மாவட்டங்களில் இருந்து கடந்த அதிமுக ஆட்சியில் கனிமவள கடத்தல் நடைபெற்ற போது வழக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்திய குமரி மாவட்ட அமைச்சர், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொது பணிதுறை, தகவல்தொழில்நுட்ப துறை ஆகிய இரண்டு அமைச்சர்களுக்கும் கனிமவள கடத்தலில் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறினார். இதற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.