திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு; தமிழ் ஆசிரியர் மீது பெண் பரபரப்பு புகார்

By Velmurugan s  |  First Published Apr 27, 2023, 10:40 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் நபர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஆசை காட்டி நெருக்கமாக பழகி பணம் ரூ.15 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதாக பெண் புகார் அளித்துள்ளார்.


கடலூர் மாவட்டம், பனையாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த  ஞானசௌந்தரி (வயது 44) என்பவர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார், அதில் குறிப்பிட்டுள்ளதாவது, தனக்கு 20 வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தானும் தனது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றோம்,

தங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து அவரவர் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர், இதனால் தான் தனியாகவே வாழ்ந்து வருகின்றேன். மேலும் கடந்த மூன்று வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே காண்ட்ராக்ட் மூலம் வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் அனுப்பி வருகின்றேன். இந்நிலையில் 2021ம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, அவருடன் நெருங்கி பழகி வந்ததாகவும் மேலும் சுரேஷ்குமார் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலை பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருவதாகவும், மேலும் தங்களுக்குள்  பழக்கம் விரிவடைந்துள்ளதாகவும் இந்த பழக்கம் காரணமாக நாளடைவில் தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பணம் பறித்ததாக தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

மதுரை சித்திரை திருவிழா; வரலாறு காணாத அளவில் சிறப்பாக நடத்த ஏற்பாடு - அமைச்சர் தகவல்

மேலும் தமிழாசிரியர் சுரேஷ் குமார் வீடு கட்டுவதற்காக பலமுறை ரொக்கமாகவும், ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாகவும் ரூ.15 லட்சம் வரை வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் தன்னிடம்  இருந்த தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்துள்ளார். இது குறித்து தான் சுரேஷ்குமாரிடம்  தொடர்பு கொண்டு பலமுறை தனது பணத்தை திருப்பி கேட்டும் தன்னை விரட்டி வந்தார். பின்னர் தான்  ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. 

ஆட்சியர், அதிகாரிகள் புடைசூழ அடக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விஏஓ உடல்

மேலும் தமிழாசிரியர் சுரேஷ்குமார் தான் காவல் உதவி ஆய்வாளரை திருமணம் செய்ய இருப்பதாகவும், அதனால் நீ எனக்கு வேண்டாம்,பெண் போலீசின் ஆதரவு எனக்கு உள்ளது. உன் பணத்தை தர முடியாது என கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பியை சந்தித்து மனு அளித்தாக குறுப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து ஞான செளந்தரி கூறுகையில்"

தனக்கு இழைக்கப்பட்ட இந்த நிலை கணவரால் கைவிடப்பட்ட வேற எந்த பெண்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது, மேலும் தமிழாசிரியர் சுரேஷ்குமார், கணவனால் கைவிடப்பட்ட பல பெண்களிடம் தொடர்பில் உள்ளதும், அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதும் தெரியவந்துள்ளது, ஆகவே போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து தன் பணத்தை மீட்டுத் தரவேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிடம் புகார் மனு  அளித்தாக தெரிவித்துள்ளார்.

click me!