கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த தம்பதிகளிடையே ஏற்பட்ட பிரச்சினையால் வாலிபர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நூறநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ்(வயது 32). இவர் இவரது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 52 பேருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தனர்.
கன்னியாகுமரி பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு பேருந்தில் வந்த அனைவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது பிரதீஷ் சுற்றுலா வந்த இடத்தில் மது குடித்ததாகவும் இதனால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பிரதிஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபம் அடைந்த பிரதிஷ் தான் தங்கி இருந்த தங்கும் விடுதியில் மேல் தளத்திற்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு உடன் சுற்றுலா வந்தவர்கள் திரண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் காவல் துறையினர் பிரதிஷுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அவர் இருக்கும் இடத்தை தீயணைப்பு வீரர்கள் நெருங்கினர். தீயணைப்பு வீரர்கள் தன் அருகே வந்தால் கீழே குதித்து விடுவேன் என அவர் மிரட்டல் விடுத்தார்.
அவரது மனைவி மற்றும் குழந்தைகளும், உடன் சுற்றுலா வந்தவர்களும் கெஞ்சி கேட்டும் அந்த வாலிபர் கீழே இறங்க மறுத்துவிட்டார். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாகவும் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் போக்கு காட்டிய கேரளா வாலிபர் பிரதீஷ் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாத்திரக்கடையில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து; லிப்டில் சிக்கி ஊழியர் உயிரிழப்பு
கேரளா வாலிபரின் இந்த தற்கொலை முயற்சியால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.