சத்ரபதி வீர சிவாஜியின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில், குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது.
இந்த கோயிலிலை தொட்டு கோயில் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகாமையில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருகிறது. 9 அடி உயரமுள்ள இந்த சிலைக்கு, சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் ஆகும்.
இந்த நிலையில், சத்ரபதி வீர சிவாஜியின் சிலை நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று சிலையில் தலைப்பக்கத்தை உடைத்ததாக கூறப்படுகிறது. இச்செய்தி அக்கம் பக்கத்தினரிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தியது. ஏதாவது மோதல் ஏற்படுமோ என்று போலீஸ் பலத்த பாதுகாப்பை அப்பகுதியில் போட்டனர்.
இதையும் படிங்க..AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
பிறகு அங்கு ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்ரபதி வீர சிவாஜியின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!