கஞ்சா போதையில் பெண்களிடம் ஆபாச வார்த்தைகளில் வசை பாடிய இளைஞர்கள் விரட்டியடிப்பு

By Velmurugan s  |  First Published Apr 8, 2023, 11:42 AM IST

குமரி எல்லையில் கஞ்சா மற்றும் மதுபோதையில் வழிநெடுக பெண்களிடம் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள், பொதுமக்களின் புகாரின் பேரில் சிற்றார் அணை பகுதியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை விரட்டி அடித்த காவல் துறையினர்.


குமரி எல்லை பகுதியான நெட்டா பகுதியில் சிற்றார் அணை அமைந்துள்ளது. இந்த பகுதி சாலையோரத்தில் அமைந்துள்ளதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அணைப்பகுதியின் அழகை பார்த்து அந்த பகுதியில் இறங்கி தண்ணீரில் நீராடுவதும், விளையாடுவதும் வழக்கமாக உள்ளது. அதுபோல இந்தப் பகுதிகளில்  காவல் துறையினரின் கண்காணிப்பு குறைவு என்பதால் கொரோனா காலத்திற்கு பின்பு இந்த பகுதியானது இளைஞர்களுக்கு கஞ்சா பயன்படுத்தவும், மது அருந்தவும் ஏற்ற இடமாக மாறிப்போனது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல புகார்கள் அளித்தும் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் மது போதையில் நிதானமின்றி வந்த ஒரு சில இளைஞர்கள் வழிநெடுக செல்லும் பெண்களிடம் மிகவும் அருவருக்கதக்க, முகம் சுழிக்கும் வார்த்தைகளை கூறி திட்டியுள்ளனர்.

Latest Videos

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது

இதை அடுத்து அப்பகுதி மக்கள் மீண்டும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிற்றார் அணைப்பகுதியில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை விரட்டி அடித்தனர். கொரோனா காலத்திற்குப் பின்பு காவல் துறையினரின் கண்காணிப்பில் மெத்தனம் ஏற்பட்டதால் தான் இந்த பகுதி கஞ்சா மற்றும் மதுப் பிரியர்களின் கூடாரமாகவும் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

click me!