கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே தனியார் வேன்ல் பள்ளிமுடித்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்கள் இருவர் வேன் சக்கரத்தில் சிக்கிய நிலையில் 7வயது மாணவன் பலி.
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே சமாதிநடை மேலவீடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு சூரியநாத் (வயது7) மற்றும் சபரிநாத் ஆகிய இருமகன்கள் இருந்தனர். இவர்கள் குலசேகரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்தனர்.
சூரியநாத் மற்றும் சபரிநாத் இருவரும் தினமும் பொன்மனை பெருவள்ளிகடவு பகுதியை சேர்ந்த ஆன்டனி ஜார்ஜ் (வயது 55) என்பவரது தனியார் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடித்து வேனில் மாணவர்களை வீட்டிற்கு அருகில் கொண்டு சென்று இறக்கிய ஓட்டுநர் ஆன்டனி ஜார்ஜ். வேனை பின்னோக்கி இயக்கியுள்ளார்.
பரபரப்பான பேருந்து நிலையத்தை மணமேடையாக்கிய காதல் ஜோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
வேன் பின்னால் வருவதை எதிர்பாராத மாணவர்கள் சூரியநாத் மற்றும் சபரிநாத் வேனின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர். வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கிறதில் மாணவன் சூரியநாத் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியானார். இதேபோல் அவரது சகோதரர் சபரிநாத் படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியினர் மாணவன் சபரிநாத்தை மீட்டு குலசேகரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
போட்டி தேர்வுகளுக்கான அரசின் இலவச வகுப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இதையடுத்து உயிரிழந்த மாணவர் சூரியநாதின் உடலை கைபற்றிய குலசேகரம் காவல்துறையினர் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல வேனிலிருந்து இறங்கிய மாணவர்கள் வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.