கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வினில். இவர் இன்று காலை களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒற்றாமரம் பகுதியில் வைத்து தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளார்.
அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி எதிரே வந்த பொலிரோ கார் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கட்டுபாட்டை இழந்த பொலிரோ வாகனம் எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோட்டார் சைக்கிள் மீதும் வேகமாக மோதியுள்ளது. இதில் இரண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
நாமக்கல்லில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை; பெண்ணின் தந்தை கவலைக்கிடம்
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் காரில் வந்த இரண்டு பேர் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய படி சாலையில் சிதறி கிடந்தவர்களை அக்கம் பக்கத்தினரும், வாகன ஓட்டிகளும் ஓடி வந்து மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
சாலையோரத்தில் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் தமிழக இளைஞர்கள்; அதிர்ச்சி சம்பவம்
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து குறித்து களியக்காவிளை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.