தனியார் கல்லூரியில் பயங்கரம்... 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!

Published : Nov 14, 2019, 04:58 PM IST
தனியார் கல்லூரியில் பயங்கரம்... 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை..!

சுருக்கம்

செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-வது தளத்திலிருந்து மாணவி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணப்ரியா (20). இவர் கல்பாக்கத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் பயின்று வருகிறாள். இவர் நேற்று மாலை கல்லூரியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிருஷ்ணப்ரியாவை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க கல்லூரி நிர்வாகம் மறுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கல்லூரியில் படிக்கும் சகமாணவிகளும் படிப்பை கருதி, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிவிக்க தயங்குவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்
என்னது! வசூல்ராஜாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கல்லூரி மாணவர்களா? வெளியான பகீர் தகவல்!