இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய ஷேர் ஆட்டோ..! பலத்த காயமடைந்து தொழிலாளி பலி..!

Published : Oct 19, 2019, 12:34 PM IST
இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய ஷேர் ஆட்டோ..! பலத்த காயமடைந்து தொழிலாளி பலி..!

சுருக்கம்

செங்கல்பட்டு அருகே இருசக்கரவாகனம் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் பலியானார்.

செங்கல்பட்டு அருகே இருக்கும் ஒரகடத்தை அடுத்த சென்னகுப்பத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். வயது 50. தொழிலாளியான இவர் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடன் பரனுரைச் சேர்ந்த சுஜாதா என்கிற பெண்ணும் அதே ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.

ஒரகடம் அருகே ஷேர் ஆட்டோ வந்துகொண்டிருந்தது. அதே சாலையில் எதிரே திருவண்ணாமலையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். சாலை திருப்பத்தில் ஷேர் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ரங்கநாதன், சுஜாதா மற்றும் லோகநாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூன்று பேரையும் சிகிச்சைக்காக பொத்தேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக ரங்கநாதன், பல்லாவரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?
கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்