மத்திய, மாநில அரசுகளின் தீவிர கண்காணிப்பில் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாமல்லபுரம் வருகைபுரிந்த மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வருவதையொட்டி அக். 11 - 13 ஆகிய தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரம் வருகை தர உள்ளார்கள். இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். அப்போது, இரு தரப்பு உறவு மற்றும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுர சிற்பங்களையும் இரு தலைவர்களும் பார்வையிட உள்ளனர். அங்குள்ள சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்கப்பட உள்ளது.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் தீவிர கண்காணிப்பில் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாமல்லபுரம் வருகைபுரிந்த மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் அக். 11 முதல் 13 வரை மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என்பதாலும், பாதுகாப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.