இந்தப் பாறையைப் பார்த்து வியந்த சீன அதிகாரிகள், பாறை நிற்பதற்கான காரணத்தை கேட்டு, ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.
மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட இன்றுமுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்த நிலையில் ரூ. 40 கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளது. வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ. 600 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. முன்னதாக கடற்கரை கோயிலை பார்ப்பதற்கு மட்டுமே 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
undefined
கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து அல்லது வான் இறைக் கல் என்று உள்ளூர் பொதுமக்களால் அழைக்கப்படும், இந்தப் பெரிய, உருண்டை வடிவப் பாறாங்கல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் மர்மம் இன்றுவரை புரியவில்லை. மாமல்லபுரத்திற்கு அன்றாடம் வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறைக் கல்லை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
இந்தப் பாறைக்கல் உருண்டை 5 மீட்டர் விட்டமும், 6 மீட்டர் உயரமும், 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் இருந்து உருண்டோடி சமதளத்தில் நின்றிருக்கவேண்டும். எந்த விதப் பிடிப்பும் இல்லாமல் சாய்வான தளத்தில் நிற்பது வியப்பிறகுரியது.
இந்தப்பாறையின் ஆபத்து பற்றி சற்றும் கவலைப்படாத சுற்றுலாப் பயணிகள் பறையின் அடியிலேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அமர்ந்து இளைப்பாறுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சியாகும். சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து வழி நடத்தும் வழிகாட்டிகள் இதன் அடியிலேயே நின்று கொண்டு கிருஷ்ணன் கோகுலத்தில் வெண்ணெய் திருடியதையும் இந்தப் பாறையின் உருண்டை வடிவத்தையும் இணைத்து தினமும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, சீன அதிபர், ஜின்பிங் மாமல்லபுரம் வந்த்அ போது இந்தப்பாறையை பார்த்து சீனர்களே வியந்து போயினர். இந்தப் பாறையைப் பார்த்து வியந்த சீன அதிகாரிகள், பாறை நிற்பதற்கான காரணத்தை கேட்டு, ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். பாறையை, உருள விடாமல் தாங்குவது போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் கட்டணம் வசூலிப்பதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.