வரி ஏய்ப்பு புகார்... பிரபல துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

By vinoth kumar  |  First Published Oct 5, 2021, 11:15 AM IST

கடந்த 1926ம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது பச்சையப்பாஸ் துணிக்கடை. இந்த கடை அப்பகுதியில் பிரபலமான துணிக்கடையாக திகழ்ந்து வருகிறது. 


காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடை உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1926ம் ஆண்டு பச்சையப்ப முதலியார் என்பவரால் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது பச்சையப்பாஸ் துணிக்கடை. இந்த கடை அப்பகுதியில் பிரபலமான துணிக்கடையாக திகழ்ந்து வருகிறது. இதன் கிளைகள் சென்னை தியாகராயநகர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined


இந்நிலையில், இன்று காலை 8 மணிமுதல் பச்சையப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகள் மற்றும் செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி. நிதி நிறுவனம் உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
காஞ்சிபுரத்தில் மட்டும் மொத்தம் 8 இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக வரி ஏய்ப்பு மற்றும் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

click me!