வீடியோ காலில்.. நிர்வாணம்.. ஆபாச பேச்சு.. வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்.. வைரலாகும் அந்தரங்க புகைப்படங்கள்.!

By vinoth kumar  |  First Published Oct 3, 2021, 4:26 PM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி (38). இவருக்கும் நெல்வாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு முஸ்லீம் மதப்படி திருமணம் நடைபெற்றது.


வாட்ஸ் அப் வீடியோ காலில் இளம்பெண்ணுடன் நிர்வாண கோலத்தில் கொஞ்சலுடன் பேசிய திருக்கழுக்குன்றம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி (38). இவருக்கும் நெல்வாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு முஸ்லீம் மதப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக அன்சாரியின் மனைவி திருக்கழுக்குன்றம் அருகே நெல்வாய் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த கணவர் மனைவியின் செல்போனை பரிசோதித்தபோது அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனால் அதிர்ச்சியடைந்த அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் செல்போனில் மற்றொருபுறம் பேசி வரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில்,  முனிசேகரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது முறையான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து பேசி விவரம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த முனிசேகர் என்னையும் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். இறுதியில், அஷ்ரப் அன்சாரியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்தது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பது தெரியவந்தது. 

மேலும், மனைவியின் செல்போனில் இருந்த காவல் ஆய்வாளர் முனிசேகரின், அந்தரங்க புகைப்படங்களை சேகரித்த கணவர் அஷ்ரப்  டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முனிசேகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

click me!