வார்டு உறுப்பினரான பிரபல ரவுடியின் மனைவி.. பதவியேற்பு விழாவிலேயே கஞ்சா வழக்கில் அதிரடி கைது..!

By vinoth kumar  |  First Published Oct 22, 2021, 12:01 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள நெடுங்குன்றம் ஊராட்சியின் 9வது வார்டு உறுப்பினராக விஜயலட்சுமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார். நெடுங்குன்றம் சூர்யா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற நிலையில், பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள நெடுங்குன்றம் ஊராட்சியின் 9வது வார்டு உறுப்பினராக விஜயலட்சுமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார். நெடுங்குன்றம் சூர்யா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

தற்போது சிறையில் உள்ள சூர்யா அங்கிருந்து கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை எதிர்த்து யாரும் நிற்கக்கூடாது. என் மனைவிக்கு ஊராட்சி மன்றத் துணை தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சிறையில் இருந்தபடியே ரவுடி சூர்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலஷ்மி நேற்று பதவியேற்க வந்த நிலையில், அவரை ஓட்டேரி போலீசார் பதவியேற்பு விழா மேடையில் வைத்தே  அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில்;- விஜயலட்சுமி கஞ்சா கடத்தி அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததால் கைது செய்துள்ளோம் என்று விளக்கமளித்தனர்.

click me!