செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் கௌதமன் (59). கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள போலீஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகர காவல்துறையில் பாதுகாப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வந்தார்.
செங்கல்பட்டு அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் கௌதமன் (59). கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள போலீஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகர காவல்துறையில் பாதுகாப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வந்தார். நீதிபதிகள், உயரதிகாரிகள், அரசு விருந்தினர்கள் போன்றவர்களுக்கு இந்த பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
undefined
இவரது மனைவி லதா (55). இவர்களுக்கு சாய் முகிலன் (27), சாய் சித்தார்த்தன் (16) என்ற மகன்கள் உள்ளனர். பணி நிறைவு பெற ஓராண்டு இருக்கும் நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், விருப்ப ஓய்வு கொடுக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் கௌதமன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய அவர், தான் கையோடு எடுத்து வந்த கைத்துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவரது மனைவி லதா மற்றும் மகன்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கௌதமன் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கௌதமனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணிச்சுமை காரணமாக உயிரிழந்தாரா? வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.