"அத்திவரதரை பாதுகாத்த எங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க" - காவலர்கள் வேண்டுகோள் .. அரசு பரிசீலிக்குமா ??

By Asianet Tamil  |  First Published Aug 17, 2019, 3:32 PM IST

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறிது  ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது .


கடந்த ஜூலை 1 முதல் தொடர்ச்சியாக 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளி வந்த அத்திவரதருக்கு பூஜைகள் நடந்தது . அத்திவரதரை காண தமிழகம் மட்டுமில்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர் .

Tap to resize

Latest Videos

undefined

குடியரசு தலைவர் , மாநில முதல்வர்கள் , அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் , திரையுலக பிரபலங்கள் என பலர் வருகை தந்து அத்திவரதரை தரிசித்தனர் .

பக்தர்களின் பாதுகாப்புக்காக காஞ்சிபுரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் . இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து காவலர்கள் வரவழைக்கப்  பட்டிருந்தனர் .பக்தர்களின் வாகனங்களை சோதனையிவது , அவர்களை முறையாக வரிசையில் அனுப்புவது , குடிநீர் போன்றவை கொடுப்பது , வயதானவர்களை அழைத்து செல்வது போன்ற பணிகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றினார் . 48 நாட்கள் தொடர்ச்சியாக இந்த பணிகளை செய்துள்ளனர் .

இந்த நிலையில் இன்றோடு அத்திவரதர் வைபவம் முடிந்து காவலர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி மீண்டும் அங்கு பணியில் சேர உள்ளனர் . தொடர்ந்து 50 நாட்கள் கடுமையான கூட்டத்தில் பணியாற்றி இருப்பதால் தங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என காவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது . அரசு இதை பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

click me!