இதுவரை எண்ணப்பட்டத்தில் ரூ.7 கோடி வரை பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
அத்தி வரதர் தரிசனம் நிறைவுற்றதும் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு அத்தி வரதர் சிலையை வசந்த மண்டபத்தில் இருந்து 100 அடி தொலைவில் உள்ள அனந்தசரஸ் குளத்திற்குள் எழுந்தருளச் செய்யும் பணிகள் தொடங்கும். இந்த பணிகள் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். அதற்கு பின் 40 ஆண்டுகள் கழித்து 2059 ஆம் ஆண்டு அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
காஞ்சிபுரம் கோயில் மூலவர் தரிசித்த பின் இன்று மாலை அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்படுவார் என காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். அத்திவரதர் வைபவம் சிறப்பாக நடக்க உதவிய காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை ஆட்சியர் தெரிவித்தார். இதுவரை எண்ணப்பட்டத்தில் ரூ.7 கோடி வரை பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளதாக அவர் கூறினார். இதுவரை ஒரு கோடியே 5 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.