அத்திவரதரின் அந்தரங்க சயனம்... அடடே... இத்தனை ரகசியங்களா..?

By Thiraviaraj RMFirst Published Aug 17, 2019, 3:03 PM IST
Highlights

48 நாட்களுக்குப் பிறகு இன்னும் சற்று நேரத்தில் அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதரை சயனிக்க வைக்கும் பணி தொடங்கும் என காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார். 
 

48 நாட்களுக்குப் பிறகு இன்னும் சற்று நேரத்தில் அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதரை சயனிக்க வைக்கும் பணி தொடங்கும் என காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்துள்ளார்

இரவு 10 மணிக்கு மேல் அத்திவரதர் சிலைக்கு தைலக்காப்பு அணிவிக்கப்படுகிறது. அத்தி வரதர பெருமாள் சிலை 40 ஆண்டுகள் நீர் நிறைந்த கோயில் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கு முன் பச்சை கற்பூரம், லவங்கம், ஏலக்காய், சாம்பிராணி, சாதிக்காய், வெட்டி வேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி, அந்த தைலம் தான் அத்தி வரதர் சிலை மீது பூசப்பட உள்ளது.

பொதுவாக ஒரு சிலைக்கு தைலக் காப்பு என்றால் இப்படி தான் செய்து பூசப்படுவது வழக்கம். அறிவியல் ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் இந்த தைலக் காப்பு சிலையை மேலும் வலுவானதாக ஆக்கும். 

அத்தி வரதர் 40 ஆண்டுகள் திருக்குளத்தில் வைக்கப்பட உள்ளார். அதுவரை குளத்தில் நீரில் இருப்பார். அத்திவரதர் செங்கல் தரையில் வைக்கப்பட உள்ளார். தலை மட்டும் கருங்கல்லின் மேல் இருக்கும் படி இருக்கும். இப்படி 40 ஆண்டுகள் நீரில் இருக்கும் போது, சிலை அருகே மீன்கள், பாம்புகள் செல்லும் போது உரச வாய்ப்புண்டு. அப்படி சிலையை அடிக்கடி உறசினால் சிலை சேதமடைய வாய்ப்புள்ளதால், இந்த தைல காப்பு போடப்பட்டால், மீன்கள், பாம்புகள் சிலையின் அருகே செல்லாது. 

அதோடு சிலையும் தண்ணீரால் எந்த சேதமும் அடையால் இருக்கும். அத்தி வரதர் சயனம் செய்ய உள்ளது அந்தரங்க விஷயம் என்பதால், வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு சில அர்ச்சகர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுவர். 

click me!