35 நாட்களுக்கு பிறகு மீண்டும் வசூல்..! வாகன ஓட்டிகள் கவலை..!

By Manikandan S R S  |  First Published Mar 1, 2020, 4:03 PM IST

ஒரு மாதத்திற்கு பிறகு பரனூர் சுங்கச்சாவடி தற்போது மீண்டும் செயல்பட துவங்கியிருக்கிறது. மார்ச் ஒன்றாம் தேதியான இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாகனங்களுக்கு சுங்க வசூல் செய்யப்படுகிறது.


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே இருக்கிறது பரனூர் சுங்கச்சாவடி. தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இங்கு கடந்த மாதம் 26 ம் தேதி அதிகாலையில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியநிலையில் அரசு பேருந்து ஓட்டுனரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

Latest Videos

undefined

இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்தை சுங்கச்சாவடியை மறித்து நிறுத்தினார். இதனால் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனிடையே அந்த வழியாக வந்த அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திரண்டு வந்து தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அங்கிருந்த சுங்கச்சாவடி அறைகளை அடித்து நொறுக்கினர். இதில் கணினி உட்பட அங்கிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. பின் போலீசார் வந்து நிலையை கட்டுப்படுத்தினர்.

'கட்சியில மொத்தமே 5 பேர் தான் இருக்காங்களா ஐயா'..? திரௌபதி படம் பார்த்த ராமதாஸை கலாய்த்த திமுக எம்பி..!

இந்தநிலையில் சுங்கச்சாவடி முற்றிலும் சேதமடைந்ததால் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் வசூலிக்கப்படாமல் செல்ல அனுமதிக்கப்பட்டது. சுங்கச்சாவடி சரிசெய்யப்பட சில வாரங்கள்  ஆகும் என்றும் அதுவரையிலும் வாகனங்களுக்கு கட்டண வசூல் இருக்காது என்றும் கூறப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே ஒரு மாதத்திற்கு பிறகு பரனூர் சுங்கச்சாவடி தற்போது மீண்டும் செயல்பட துவங்கியிருக்கிறது. மார்ச் ஒன்றாம் தேதியான இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாகனங்களுக்கு சுங்க வசூல் செய்யப்படுகிறது. மீண்டும் தகராறு ஏற்படாமல் இருக்க சுங்கச்சாவடி அருகே போலீஸ் பூத் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!

click me!