48 வருடத்திற்கு ஒருமுறை நீரிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் விசேஷ பெருமாளான அத்திவரதர் மீடியா புண்ணியத்தால் மிகப்பெரிய மவுசு ஆகிப்போனது. அத்திவரதரை, பார்த்தாள் அனைத்தும் கிடைக்கும் என்ற எண்ணத்தால் லட்சக் கணக்கான தொடர்ந்து குவிந்ததால் காஞ்சிபுரமே கந்தல் கோலம் ஆகிப்போனது. அத்திவரதர் தரிசனம் ஆரம்பித்த ஆரம்ப நாட்களிலேயே "ஏசியாநெட் தமிழ்" தெளிவான கட்டுரை வெளியிட்டிருந்தது.

அதில் அதற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்யும் புரோகிதர்களின் அரட்டைகள் பற்றி புட்டு புட்டு வைத்து இருந்தோம். இதில் உச்ச கட்டமாக மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் VIP, பகுதியில் அமர்ந்து மாலை மரியாதையோடு சுவாமி தரிசனம் செய்தது மிகப்பெரிய சர்ச்சையாகி போனது.
undefined
அதுமட்டுமின்றி கடவுளின் நேரடி சேவகர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும், புரோகிதர்கள் சினிமாக்காரர்களை பார்த்தால் வாய் பிளந்து கொண்டு, சாமி முன்பாகவே அவர்களுக்கு கை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு சென்ற போது அங்கிருந்த தலைமைப் புரோகிதர் உட்பட பலர் ரஜினிக்கு கைகுலுக்க முயன்றனர். இதை கண்டு எரிச்சலடைந்த ரஜினிகாந்த் அவர்களை கண்டுகொள்ளாமல் சாமி கும்பிட்டார்.
அதேபோன்று, இன்று கேரளாவைச் சேர்ந்த நடிகை நயன்தாரா அத்திவரதரை வரிசையில் சென்று தரிசனம் செய்தார். ரஜினிக்கே கைகொடுத்து பழுத்த அர்ச்சகர்கள் நயன்தாராவை பார்த்தால் சும்மா இருப்பார்களா? சாமியின் முன்பாக நிற்கிறோம், என்பதை மறந்துவிட்டு நயன்தாராவிடம் பல்லிளிக்க தொடங்கி விட்டார்களாம், இதை பார்த்த பக்தர்கள் மிகுந்த எரிச்சலும் டென்ஷனுக்கு ஆளாகி போனார்களாம்.
புராதான மற்றும் நீண்ட நெடிய அற்புதமான வரலாறு கொண்ட இந்து மதத்தில் கடவுளுக்கு சேவகம் செய்கிறோம் என்ற போர்வையில் இருப்பவர்கள் நிஜ சுத்தத்தோடு ஆன்மீக சேவையில் ஈடுபட வேண்டும். கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்பதை முதலில் இதுபோன்ற புரோகிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உணர வேண்டும் இல்லையென்றால், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், தமிழகம் நடிகர்கள் பின்னால் தான் செல்லும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.