அத்திவரதருக்கு வியர்த்து கொட்டுகிறதா ??? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் ....

By Asianet Tamil  |  First Published Aug 15, 2019, 12:05 PM IST

40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்திருக்கும் அத்திவரதருக்கு தற்போது வியர்த்து கொட்டுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது .


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர், கடந்த ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் . 31 ம் தேதி வரை சயன கோலத்தில் இருந்தவர் , ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் . நாளையொடு பொது தரிசனம் முடிந்து 17 ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க படுவார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் தான் தற்போது நின்ற கோலத்தில் இருக்கும் அத்திவரதர் சிலையின் முகத்தில்  வியர்த்து கொட்டுவதாக தகவல் பரவி வருகிறது . இதனால் அத்திவரதரை விரைந்து அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முதியவர் ஒருவர் கூறும்போது , கோவில் மண்டபத்தில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக இவ்வாறு வியர்க்க கூடும் என்றார் .

click me!