அத்திவரதர் கோயில் வளாகத்திலேயே அழகான ஆண் குழந்தையை பிரசவித்த பெண்... 40 ஆண்டுகளில் இல்லாத ஆச்சர்யம்..!

By vinoth kumarFirst Published Aug 14, 2019, 12:49 PM IST
Highlights

அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு கோயில் வளாகத்திலே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அத்தி வரதரைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணி விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நடைபெற்று 3 கிலோ எடையுள்ள அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு கோயில் வளாகத்திலேயே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 16-ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது. இதனையடுத்து, 17-ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார்.   

இந்நிலையில், இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதனிடையே, 45-வது நாளான இன்று பன்னீர் ரோஜா நிறத்தில் நீல சரிகை பட்டாடையில் ராஜ மகுடம் அணிந்து, பல வண்ண மலர் மாலைகள் அணிந்தவாரு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 

 

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு கோயில் வளாகத்திலே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அத்தி வரதரைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணி விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நடைபெற்று 3 கிலோ எடையுள்ள அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 44 நாட்களில் 90 லட்சம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!