நிறைவு பெறுகிறது அத்திவரதர் வைபவம்!! 17 இல் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் - காஞ்சிபுரம் ஆட்சியர் உறுதி

By Asianet Tamil  |  First Published Aug 13, 2019, 1:30 PM IST

1979 ற்கு பிறகு 2019 இல் வெளி வந்த அத்திவரதர் , இனி நாற்பது ஆண்டுகள் கழித்து 2059 இல் தான் காட்சி தருவார் . அதனால் இறுதி நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..   


கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது . இறுதி நாளான ஆகஸ்ட் 17 அன்று ஆகம விதிகளின் படி முறையான பூஜைகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் மீண்டும் வைக்கப்பட இருக்கிறார் .

Tap to resize

Latest Videos

undefined

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :

"ஆகஸ்டு 15-ம் தேதியுடன் முக்கிய பிரமுகர்கள் தரிசனமும், ஆகஸ்டு 16-ம் தேதியுடன் பொது தரிசனமும் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு உரிய ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் வரும் ஆகஸ்டு 17-ம் தேதி அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறார்.

கடந்த 41 நாட்களில் அத்தி வரதரை சுமார் 80 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்" என்று கூறினார் . 

1979 ற்கு பிறகு 2019 இல் வெளி வந்த அத்திவரதர் , இனி நாற்பது ஆண்டுகள் கழித்து 2059 இல் தான் காட்சி தருவார் . அதனால் இறுதி நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..   

click me!