ஏழுமலையானை ஓவர்டேக் பண்ணும் அத்திவரதர் !! - நாளுக்கு நாள் எகிறும் மக்கள் கூட்டம் ..

By Asianet Tamil  |  First Published Aug 15, 2019, 5:58 PM IST

திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டத்தை விட அத்திவரதரை காண மக்கள் கூட்டம் அதிகம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .


கடந்த 9 ம் தேதியில் இருந்து 13 ம் தேதி வரை திருப்பதியில் ஒரு நாளைக்கு 70 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை மக்கள் தரிசனம் செய்திருக்கின்றனர் . அதே நாட்களில் அத்திவரதரை தரிசனம் செய்த மக்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி சென்றிருக்கிறது . 
எப்போதும் கூட்டம் அதிகம் காணப்படும் திருப்பதியை விட அதிக பக்தர்கள் காஞ்சிபுரம் வருகின்றனர் .

Tap to resize

Latest Videos

undefined

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர், கடந்த ஜூலை 1 முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் . 31 ம் தேதி வரை சயன கோலத்தில் இருந்தவர் , ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார் .

நாளையொடு பொது தரிசனம் முடிந்து 17 ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்க படுவார். அதனால் நாளை கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

click me!