காஞ்சிபுரத்தில் காதலனை மிரட்டி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

By Velmurugan s  |  First Published Jan 13, 2023, 12:34 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்த காதல் ஜோடி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை பயன்படுத்திக் கொண்ட 4 பேர் கத்தி முனையில் மாணவியை வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த காதல் ஜோடி ஒன்று நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், குண்டுகுளம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பகுதியில் பெரிதாக ஆள்நடமாட்டம் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் காதல் ஜோடி தனியாக செல்வதை நோட்டமிட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டின் பிறப்பிடம் மற்றும் ஜல்லிக்கட்டினால் வெடித்த போராட்டமும்… ஒரு பார்வை!!

Tap to resize

Latest Videos

undefined

சற்று தொலைவில் இருந்த காதல் ஜோடியை சிறிது நேரம் கழித்து நெருங்கிய 4 பேர் கொண்ட குழு கத்தியை காட்டி மிரட்டி இருவரிடமும் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர். மேலும் மது போதையின் உச்சத்தில் இருந்த 4 பேரும், கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவியை வீட்டில் இறக்கிவிட்ட பின்னர், காதலன் தனது உறவினர் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் மாஸ்க் அணிந்திருந்ததால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் விமல், விமல் என்ற பெயரை அடிக்கடி உச்சரித்ததாக காதலன் தெரிவித்துள்ளார்.

இந்த பொங்கலுக்கு பாரம்பரிய முறையில் வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து மகிழலாம் வாங்க!

அதன் அடிப்படையில், அப்பகுதியில் இருந்த விமல் என்ற நபரைத் தேடி காவல் துறையினர் சென்றபோது அவன் தப்பியோட முயற்சித்துள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர், அவனை வைத்துக் கொண்டு மற்ற மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!