ஆயிரம் ரூபா பணம் வரலிங்க ; முதல்வரிடம் நேரில் கோரிக்கை வைத்த பெண்கள் - அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு

By Velmurugan s  |  First Published Sep 29, 2023, 1:34 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என 2 பெண்கள் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  திருவள்ளூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து சென்னைக்கு காரில் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தில் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது முதலமைச்சர் வருகைக்காக பெண்கள், பொதுமக்கள் நின்று கொண்டிருப்பதை கண்டதும் முதலமைச்சர் ஒரு நிமிடம் காரை நிறுத்தி நலம் விசாரித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் அங்கிருந்த கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு கிராம பெண்கள் திடீரென ஓடிவந்து முதலமைச்சரிடம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைகள் தொகை திட்டம் பதிவு செய்தும் எங்களுக்கு வரவில்லை என முதலமைச்சர் இடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக அருகில் இருந்த கட்சி பிரமுகரிடம் கேட்டறிந்து இது குறித்து உடனடியாக அமைச்சர் தா.மோ.அன்பரசிடம் பேசி உடனடியாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

எனக்கு மகன் பிறந்தால் முதல்வரின் பெயரை தான் வைப்பேன்; சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் நெகிழ்ச்சி

அதன் பின் சாலையில் மின் விளக்கு இல்லாமல் இருளை கண்டதும், இப்பகுதியில் உடனடியாக உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்க அதிகாரியிடம் சொல்லுமாறு உத்தரவிட்டு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார். முதலமைச்சரிடமே நேரடியாக சென்று மகளிர் உரிமை திட்டம் தொகை வரவில்லை என புகார் தெரிவித்த இரண்டு பெண்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!