காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மாயம்; காவல்துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Aug 10, 2023, 10:52 AM IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் மாயமான விவகாரம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு உள் மற்றும் புற நோயாளிகள் என சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளே பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மகப்பேறு நல பிரிவில் நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்த இருளர் சமுதாய கர்ப்பிணி பெண் காமாட்சிக்கு(வயது 28) பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் தன் கணவர் மூர்த்தி, நான்கு வயது மகன் சக்திவேல், உறவினர் குள்ளமா, அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று காமாட்சிக்கு சுக பிரசவம் ஆன நிலையில் தன்னுடைய கணவர் மூர்த்தி, மகன் சக்திவேல், குள்ளமா, மகள் சௌந்தர்யா ஆகிய நான்கு பேரும் மகப்பேறு நலப்பிரிவு அருகே இருந்தனர்.

Latest Videos

11 மணி நேரத்தில் 1330 திருக்குறளை தென்னை ஓலையில் எழுதி 11ம் வகுப்பு மாணவன் சாதனை

அப்போது அடையாளம் தெரியாத ஒரு பெண் இவர்களுடன் பேச்சுவார்த்தை கொடுத்துள்ளார். நேற்று மாலை மருத்துவமனை வளாகத்துள்ளே உணவு சாப்பிடலாம் என அழைத்துச் சென்றவர் பின்னர் சக்திவேல் மற்றும் சௌந்தர்யா உடன்  மாயமாகிவிட்டார். மூர்த்தியும், குள்ளமாவும் தன்னுடைய பிள்ளைகள் அருகில் விளையாடிக்கொண்டு இருப்பார்கள் என நினைத்து அமைதியாக இருந்து  விட்டனர். 

சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை தாய் கண் முன்னே முட்டி பந்தாடிய மாடு

பல மணி நேரம் ஆகியும் தங்கள் பிள்ளைகள் வராததால் சந்தேகமடைந்த மூர்த்தி மற்றும் குள்ளம்மா ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன் குழந்தைகளை காணவில்லை என புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!