அச்சச்சோ என்ன இவ்ளோ ஆச்சாரமா பேசறேல்? காஞ்சியில் வீதிக்கு வந்த வடகலை, தென்கலை பிரச்சினை

By Velmurugan s  |  First Published May 25, 2024, 11:07 AM IST

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளில் திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.


கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில், வைகாசி பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு வரதர் காட்சி அளிக்கும்போது,  தாத்தாச்சாரி குடும்பத்தினர் மந்திர புஷ்பம் எனும் வேத மந்திரங்களை  பாட, தென் கலை பிரிவினரும் பாடுவோம் என கூற வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி  வேத பாராயணம் செய்ததால்  காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில்,  இன்று கோவிலில் இருந்து வரதர் கிளம்பி சுமார் 12 வீதிகள் வழியாக அருள் பாலித்த படி  பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இரண்டாவது நாளாக மீண்டும் தென்கலை, வடக்கலை இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர் என்பதை கூட பார்க்காமல், வடகலை, தென்கலை என இரு பிரிவினரும்  பேசவே நா கூசும் வகையிலான அவ சொற்களை மக்கள் மத்தியில் மாறி மாறி பேசி திட்டிக் கொண்டனர்.

திருவானைக்காவல் கோவிலின் செல்லப்பிள்ளை அகிலாவுக்கு கஜ பூஜையுடன் பிறந்த நாள் கொண்டாடிய பக்தர்கள்

பல ஆண்டுகளாக தேவராஜ கோவில் வளாகத்துக்குள்ளையே புகைந்து வந்த இந்த வாக்குவாதம், தற்போது வீதிக்கு வந்துவிட்டது என பொதுமக்கள் புலம்புகின்றனர். நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும், இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோ தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தானே உருவாக்கிய பைக்கை பரிசளித்து பாலாவை திகைக்க வைத்த புதுவை பள்ளி மாணவன்

வடக்கலை தென்கலை பிரச்சினையால் நாங்கள் முழு மனதுடன் பெருமாளை தசிக்க முடியவில்லை என பக்தர்கள் புலம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல்,  தேவராஜ சுவாமி திருக்கோயிலின் மணியகாரர் து.கிருஷ்ணகுமார் என்பவர் இரு பிரிவினர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது,  ஒரு  பிரிவை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுக்க முற்பட்டார். அதைக்கண்ட கிருஷ்ணகுமார் அந்த செல்போனை தூக்கி எறிந்தது அங்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் கோயில் நிர்வாக தர்மகர்த்தா, உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் அவர்கள் முன்னிலையிலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!