காஞ்சியில் குலதெய்வ கோவிலுக்கு சீர் வரிசை எடுத்து வந்து நடிகை ரோஜா மனம் உருகி வழிபாடு

By Velmurugan s  |  First Published May 20, 2024, 11:31 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் அமைந்துள்ள குலதெய்வம் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும்,  நடிகையுமான ரோஜா மனம் உருகி பிரார்த்தனை.


காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தில் அக்கிராம மக்களின் கிராம தேவதையாக செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 18ம் தேதி சனிக்கிழமை தொடங்கின. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகா பூரணாஹீதி தீபாராதனைகள் முடிந்து யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

undefined

கும்பாபிஷேகத்தை அடுத்து சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இக் கோவிலில் கடந்த 2001, 2009 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன்பாக கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை இத்திருக்கோவில் குலதெய்வ குடும்பத்தினர் மற்றும் திருமுக்கூடல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Narendra Modi: மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்; ஆருடம் சொன்ன கோவை கோவில் காளை

கும்பாபிஷேக விழாவில்  ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, உத்தரமேருர் எம்எல்ஏ க.சுந்தர், எம்பி.க.செல்வம் ஆகியோர் உட்பட கிராம பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ரோஜா தனது மகன் மற்றும் மகள் உடன் திருக்கோயில் யாகசாலையில் அம்மனுக்கு புடவை, வளையல், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை அளித்து குடும்பத்துடன் சங்கல்பம் செய்து கொண்டு பிரார்த்தனையில் மனம் உருகி வேண்டினார்.

click me!