அனந்தசரஸ் திருக்குளம் சேர்கிறார் அத்திவரதர் !! பிரியாவிடை கொடுப்போம் .. இனி 2059 இல் தான் வருவார் ..

Published : Aug 17, 2019, 07:24 AM IST
அனந்தசரஸ் திருக்குளம் சேர்கிறார் அத்திவரதர் !! பிரியாவிடை கொடுப்போம் .. இனி 2059 இல் தான் வருவார் ..

சுருக்கம்

கடந்த 48  நாட்களாக மக்களுக்கு காட்சி தந்த காஞ்சிபுரம் அத்திவரதர் , இன்று தனது இருப்பிடமான அனந்தசரஸ் குளத்திற்கு செல்ல இருக்கிறார் ..  

1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே  சென்றது  . 4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது .

48 நாட்கள் மட்டுமே இவர் காட்சி தருவதால் மூலவரான வரதராஜ பெருமாளுக்கு செய்யப்படும் நான்கு கால பூஜைகள் அத்திவரதருக்கு செய்யப்பட வில்லை . நிவேதனங்கள் படைக்கப்பட்டு தீபாராதனைகள் மட்டுமே காட்டப்பட்டது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

இந்த நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் இன்றோடு நிறைவு பெறுகிறது . பொது தரிசனம் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்டு விட்டது . ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் இன்று தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளம் சேர இருக்கிறார் .

இந்த நிகழ்வின் போது பட்டாச்சாரியார்கள் , திருக்கோவில் ஊழியர்கள் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது .

இன்று அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் அடுத்து 40  ஆண்டுகள் கழித்து 2059 இல் தான் வெளிவருவார் . அந்த நேரத்தில் இப்போது தரிசனம் செய்த நம்மில் எத்தனை பேர் மீண்டும் தரிசிக்கும் புண்ணியம் பெற்றிருப்பார்கள் என யாருக்கும் தெரியாது . எனவே அத்திவரதருக்கு இன்று பிரியா விடை கொடுப்போம் .. தேசத்தின் நலனுக்காகவும் , உலக அமைதிக்காகவும் , பொதுமக்களின் சந்தோசத்திற்காகவும் வேண்டி கொள்வோம் ..

PREV
click me!

Recommended Stories

தம்பி சமாதியில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.! அண்ணனை அலேக்கா தூக்கிய போலீஸ்.!
மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?