காஞ்சிபுரம் அத்திவரதரை தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அத்திவரதரை தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்த பெருவிழாவில் கலந்து கொள்ள அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
undefined
கடந்த 8 நாட்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், 23-ம் தேதி பிரதமர் மோடியும் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளனர்.
இதனிடையே உடல் நிலை பாதிக்கப்பட்டு எந்த கட்சி பணிகளில் சரிவர ஈடுபடாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருந்து வந்தார். இந்நிலையில், காஞ்சிபுரம் அத்திவரதரை குடும்பத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரிசனம் செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், சுதீஷின் மனைவி ஆகியோர் தரிசனம் செய்தனர்.