முன்னாடியெல்லாம் மழை பெஞ்சா பள்ளிக்கு விடுமுறை! இப்போ தண்ணீர் இல்லனு விடுமுறை!

By manimegalai a  |  First Published Jun 19, 2019, 6:04 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள,  தனியார் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  ஆறுகள், ஏரிகள், குட்டைகள், குளங்கள், வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.பொது மக்கள் தண்ணீருக்காக காலிகுடங்களுடன் பல்வேறு பகுதியில் தண்ணீர் பிடிக்க அலைந்து திரிந்து வருகின்றனர். 
 
Latest Videos

undefined

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு,  மணல் திருட்டால்,   நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.  இதனால் பொது மக்கள் குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர்.  அங்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.  அதேவேளையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர், சிறுசேரி,  மாமல்லபுரம் திருப்போரூர், ஸ்ரீ பெரம்பத்தூர்,  உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.  இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒன்றரை மாத விடுமுறைக்குப் பின்,  கடந்த சில நாட்களுக்கு முன் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.  ஆனால் பள்ளி மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைக்கான தண்ணீர் இல்லாததால், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதிக மழை பெய்தால், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விட்டு பார்த்திருப்போம், ஆனால் தண்ணீர் பற்றாக்குறைக்காக இப்போது விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

click me!