காவல்துறை அராஜகம்... காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் அருகே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை..!

Published : Jul 03, 2019, 04:14 PM ISTUpdated : Jul 03, 2019, 04:15 PM IST
காவல்துறை அராஜகம்... காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் அருகே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை..!

சுருக்கம்

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஷேர் ஆட்டோ டிரைவர் குமார். இவர் அங்கு நடக்கும் அத்திவரதர் வைபவத்திற்கு ஆட்டோ பாஸ் பெற்றிருந்தார். இந்நிலையில், இன்று நண்பகலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்ட நெரிசல் காரணமாக, போலீசார் குமாரின் ஷேர் ஆட்டோவை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால், ஆட்டோ ஓட்டுநர் குமாருக்கும் அங்கிருந்த போலீசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஆத்திரமடைந்த குமார் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோலை வாங்கி உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் அவர் உடலில் பற்றிய தீயை அணைத்த பின்னர், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், ஆட்டோ ஓட்டுநர் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்
என்னது! வசூல்ராஜாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கல்லூரி மாணவர்களா? வெளியான பகீர் தகவல்!