ரூ.25 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை... அத்திவரதர் தரிசன பேக்கேஜ்... அதிர வைக்கும் ஐயர்கள்..!

By vinoth kumar  |  First Published Jul 16, 2019, 10:43 AM IST

அத்திவரதரை தரிசிக்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை பேக்கேஜ் சிஸ்டத்தில் விஐபிக்கள் அழைத்து வரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


அத்திவரதரை தரிசிக்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை பேக்கேஜ் சிஸ்டத்தில் விஐபிக்கள் அழைத்து வரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்தில் ஆர்வமாக உள்ளனர். காலை ஐந்து மணி தொடங்கி நள்ளிரவு வரை கூட அத்திவரதர் தரிசனம் நீடிக்கிறது. பொதுமக்கள் சுமார் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது. ஆனால் ஏற்பாடுகளின் முழுக்கட்டுப்பாடும் கோவில் புரோகிதர்கள் வசம் உள்ளது. கோவிலுக்குள் அவர்கள் வைப்பது தான் சட்டமாக உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் முதல் போலீசார் வரை உள்ளே தங்களுக்கான பணிகளை மட்டுமே செய்யும் நிலையில் உள்ளனர். விஐபி தரிசனத்திற்கான ரெகமண்டேசன் என அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்படும் எதையும் புரோகிதர்கள் பொருட்படுத்துவதில்லை. 

அதே சமயம் தினமும் விஐபி தரிசனம் என்று அத்திவரதரை அவரது சன்னதியில் அமர்ந்து தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த டிக்கெட்கள் மொத்தத்தையும் கோவிலில் உள்ள ஐயர்கள் முதல் நாளே பிளாக் செய்துவிடுகிறார்கள். பிறகு இந்த டிக்கெட்டுகளை இரண்டு பேக்கேஜ்களாக விற்பனை செய்கின்றனர். சாதாரணமாக சன்னதியில் அமர்ந்து தரிசித்து செல்ல ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். 

அதே சமயம் அத்திவரதருக்கு பட்டாடை சாத்தி அவரை தொட்டு வணங்கிச் செல்ல லட்சங்களில் பணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் தரிசனத்திற்கு 5 நிமிடங்கள் அனுமதி அளிக்கப்படுகிறது. லட்சங்கள் என்றால் 15 நிமிடம் அத்திவரதர் சன்னதியில் அமரலாம். கடந்த வாரம் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசித்து சென்றார். மேலும் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படத்திற்கும் அங்கேயே பூஜை போட்டார்கள்.

 

இதற்காக பல லட்சங்களை விஜயகாந்த் செலவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் பெரும் தொழில் அதிபர்கள். சினிமா பிரபலங்கள் அத்திவரதரை தரிசிக்க பணத்தை அள்ளி இறைக்க தயாராக உள்ளனர். இதனால் 40 நாள் தரிசனத்தை அத்திவரதர் முடிக்கும் போது கோவிலுக்குள் இருக்கும் ஐயர்கள் மற்றும் புரோகிதர்கள் கோடீஸ்வரர்கள் ஆவது உறுதி என்கிறார்கள் காஞ்சிபுரம்வாசிகள்.

click me!