காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்குளத்திற்கு படிக்கட்டு அமைக்க ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாகக் கூறி அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்.
செய்தி வாசிப்பாளராக ஊடகப் பணியை தொடங்கிய அனிதா சம்பத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளால் தற்போது நாடகம் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற பின்னர் அனிதா சம்பத் மிகவும் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நகைக்கடைகள், துணி கடைகள் உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார்.
Bold statement by News Anchor against the corruption in TN 👍 pic.twitter.com/9uXWmuNZ7g
— Kushi (@kushi_5)இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்தின் அருகே சென்ற அனிதா சம்பத் அந்த குளத்தின் அருகில் குளத்திற்கு படிக்கட்டு அமைப்பதற்காக ரூ.11.36 லட்சம் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அனதா சம்பத், இந்த குளத்திற்கு 11 லட்சத்தில் படிக்கட்டா? தற்போது 12 லட்சத்தில் ஒரு வீடே கட்டிவிடுகிறார்கள் என்று கூறி விமர்சித்தார். இந்நிலையில் அனிதா சம்பத்தின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பொதுத்துறை வங்கிகளில் கொட்டி கிடக்கும் 4,400 காலி பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இந்நிலையில், அனிதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சிலர், எங்கள் ஊரிலும் இப்படி தான். ஒரு கருப்பு டேங்கை மட்டும் வைத்துவிட்டு அதற்கு லட்சகணக்கில் கணக்கு எழுதுகின்றனர். நீங்கள் குரல் கொடுத்ததற்கு வாழ்த்துகள் என்று ஒருசிலர் ஆதரவாக பதிவிடுகின்றனர். அதே போன்று ஒருசிலர் நீங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து கொண்டு இப்படி பேசுவது சரி கிடையாது. நடைபாதை படிகட்டு அந்த குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்குகள் மற்றும் அதற்கான பராமரிப்பு செலவு அதே போன்று நீங்கள் நின்று கொண்டிருக்கும் நடைபாதையும் சேர்த்து தான் அந்த தொகை குறிப்பிட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.