செங்கல்பட்டு அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 3 மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். இந்நிலையில், வியாழன் கிழமை மாலை 3.30 மணி அளவில் கல்லூரி முடிந்ததும் 4ம் ஆண்டு மாணவர்கள் மகா ஸ்வேதா(வயது 21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3ம் ஆண்டு மாணவர்கள் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய ஐவரும் ஒரே காரில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கோவளத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு உணவகம் ஒன்றில் டீ குடித்துவிட்டு படூர் புறவழிச் சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை மாணவர் சிவா ஓட்டியுள்ளார். படூர் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. நாயின் மீது மோதாமல் இருக்க சிவா காரை இடது புறமாக திருப்பி உள்ளார்.
ஆசை ஆசையாக வாங்கிய நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு; விலை தெரியுமா?
கார் அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்த நிலையில் நிலைத்தடுமாறி சாலையை விட்டு கீழே இறங்கி தனியார் கல்லூரி வளாகத்திற்கு கார் பறந்து சென்று விழுந்தது. இதில் காரில் இருந்த மகா ஸ்வேதா, பவித்ரா, லிங்கேஸ்வரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சிவா, மாணவி கர்லின் பால் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
படிகட்டுக்கு 11 லட்சமா? அனிதா சம்பத்தின் வீடியோவுக்கு அடடே விளக்கம்
விபத்தை அறிந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கர்லின் பால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிந்தார். இந்நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிலு செய்த காவல் துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.